#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பேஸ்புக்கில் 20 வயது இளம்பெண், நிஜத்தில் 45 வயது ஆண்டி; இளைஞனுக்கு வலைவிரித்த பெண்மணியால், வழக்கில் சிக்கிய சோகம்.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூரை சேர்ந்தவர் தீபேந்திர சிங் (வயது 20). இவருக்கு சமூக வலைத்தளத்தில் 20 வயது பெண் ஒருவரின் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் நீண்ட நாட்களாக மெசெஞ்சரில் பேசி வந்த நிலையில், பெண்மணி தீபேந்திராவை தனது வீட்டிற்கு வரவழைத்துள்ளார். ஆசையாக சென்ற தீபேந்திராவுக்கு அதிர்ச்சி தரும் விஷயம் ஒன்று காத்திருந்துளது.
அதாவது, சமூக வலைத்தளத்தில் 20 வயது பெண்ணின் தோற்றத்தை ஒத்திருத்த பெண்மணி உண்மையில் 45 வயதுடையவர் ஆவார். தனது சமூகப்பக்கத்தில் அவர் இளைஞர்களை கவர 20 வயது புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.
உண்மையை உணர்ந்த இளைஞர் ஆத்திரத்தில் பெண்ணை கடுமையாக தாக்கிவிட்டு, அவரின் செல்போனை தன்னுடன் எடுத்து வந்துள்ளார். இதனால் காவல் நிலையத்தில் பெண்மணி தனது செல்போனை நபர் பறித்து சென்றதாக புகார் அளித்துள்ளார்.
காவல் நிலையத்தில் நடந்த விசாரணையில் உண்மை அம்பலமானது. தற்போது அதிகாரிகள் பெண்ணை இளைஞர் தாக்கிய குற்றத்திற்காக அவரை கைது செய்தனர்.