ஆன்லைன் காதலை நம்பி இந்தியாவுக்கு வந்த வங்கதேச பெண்: துரோகம் அம்பலமானதால் கண்ணீருடன் நாடுதிரும்பிய சோகம்.!
ஆன்லைன் காதலனை நம்பி, புதிய வாழ்க்கை நல்லபடியாக ஆரம்பிக்கும் என தன்னையே அர்ப்பணித்த பெண்ணுக்கு நடந்த பெரும் ஏமாற்றம் தொடர்பான சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
காதலுக்கு கண்கள் இல்லை என்று கூறுவதைப் போல, தற்போது அதற்கு நாடுகள் என்று எல்லையும் இல்லை என்ற நிலையை ஆகிவிட்டது. இதனால் பாகிஸ்தான், வங்காளதேசம் போன்ற நாடுகளைச் சார்ந்த நபர்களும் மறைமுகமாக இந்தியாவுக்குள் வந்து தங்களது துணையுடன் திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்கள்.
இது தொடர்பான பிரச்சனை சமீபத்தில் அதிகமாகி கொண்டு இருக்கிறது. வெளிநாட்டு துணையை கரம்பிடிப்பது குற்றம் இல்லை எனினும், முறையான ஆவணங்களை விண்ணப்பித்து நடைபெறும் வெளிநாட்டு தம்பதிகளின் திருமண நிகழ்வுகளே அதற்கு சாட்சி.
இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சரஸ்வதி மாவட்டம் வருதா ரோஷன்கர்க் கிராமத்தைச் சார்ந்தவர் அப்துல் கரீம். இவர் பக்ரைன் நாட்டில் சமையல் கலைஞராக வேலைபார்த்து வந்துள்ளார். இவருக்கு ஆன்லைன் மூலமாக வங்காளதேசத்தைச் சார்ந்த தில் ரூபா ஷர்மி என்ற பெண்ணின் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
சர்மிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 3 குழந்தைகள் இருக்கும் நிலையில், கொரோனாவின் போது ஷர்மியின் கணவர் உயிரிழந்திருக்கிறார். இதனால் அவர் தனியாக வசித்து வந்துள்ளார். இதனிடையே ஆன்லைன் நண்பர் மூலமாக பழக்கத்தை ஏற்படுத்தியவர், கடந்த செப்டம்பர் மாதம் 26ம் தேதி சுற்றுலா விசாவில் குழந்தைகளுடன் லக்னோ வந்திருக்கிறார்.
அங்கு, அதே நாளில் அப்துல் கரீமும் பக்ரைனில் இருந்து வந்த நிலையில், ஓட்டலில் அரை எடுத்து இரண்டு நாட்கள் தங்கி இருக்கின்றனர். பின் அப்துல் கரீம் தனது சொந்த கிராமத்திற்கு ஷர்மியை அழைத்துச் சென்றுள்ளார்.
அந்த சமயம் அப்துல் கரீமுக்கு திருமணமானது ஷர்மிக்கு தெரியவந்த நிலையில், இந்த காதலுக்கு அப்துல் கரீமின் மனைவி மற்றும் குடும்பத்தினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர்.
காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்த நிலையில், இருவரிடமும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் முடிவில் ஷர்மி தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நிலையில், தனது சொந்த நாட்டுக்கு திரும்பி செல்வதாக தெரிவித்திருக்கிறார். ஆன்லைன் காதலனை நம்பி, புதிய வாழ்க்கை ஆரம்பிக்கும் என தன்னையே அர்ப்பணித்த பெண்ணுக்கு நடந்த பெரும் ஏமாற்றம் தொடர்பான சம்பவம் அதிர்ச்சியை தருகிறது.
காவலர்கள் பாதுகாப்புடன் ஷர்மி மற்றும் அவரின் குழந்தைகள் மீண்டும் வங்கதேசத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.