திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பள்ளிக்கு செல்லாததை தாய் கண்டித்ததால் விபரீதம்: இரயில் முன் பாய்ந்து 13 வயது சிறுமி தற்கொலை.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மதுரா பகுதியைச் சார்ந்த சிறுமி குஷி சர்மா (வயது 13). இவர் அங்குள்ள பள்ளியில் பயின்று வந்த நிலையில், கடந்த டிசம்பர் 6 ஆம் தேதி பள்ளிக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த தகவல் அறிந்த சிறுமியின் தாய், மகள் வீட்டிற்கு வந்ததும் அவரை கண்டித்து இருக்கிறார். மேலும், மறுநாள் பள்ளிக்கு அழைத்துச் சென்று மகளை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் முன்பு கடுமையாக கண்டித்து, கன்னத்தில் அறைந்து விட்டுவந்துள்ளார்.
இதனால் மன வேதனையடைந்த சிறுமி, கடந்த சில நாட்களாகவே ஆத்திரத்தில் இருந்து வந்த வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று ஆல்வார் - மதுரா ரயில் தண்டவாள பகுதியில், அவ்வழியாக வந்த ரயில் முன் பாய்ந்து சிறுமி தற்கொலை செய்து கொண்டார்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல, அங்குள்ள பலியா மாவட்டத்தைச் சார்ந்த 18 வயதுடைய 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவி மனிஷா, எந்நேரமும் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருப்பதை தாய் கண்டித்து இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த மகள் தனது அறைக்குள் சென்று துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.