திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மருமகளை பலாத்காரம் செய்த மாமனார்; நீ எனக்கு தாய் என தூக்கியெறிந்த கணவன்.. இப்படியும் ஒரு கொடுமையா?.. பதறவைக்கும் தகவல்.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள முஜாபர்நகர் பகுதியில் 23 வயதுடைய பெண்மணி வசித்து வருகிறார். கடந்த ஜூலை மாதம் பெண்மணி நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
அவரின் கணவர் வேலை நிமித்தமாக வெளியூரில் தங்கி இருந்துள்ளார். வீட்டில் பெண்மணி தனது 50 வயது மாமனாருடன் தனியே வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் 5ம் தேதி மாமனார் மருமகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்திடுவதாகவும் மிரட்டி இருக்கிறார். இதனால் பதறிப்போன பெண்மணி வெளியே யாரிடமும் கூறாமல் இருந்து வர, கணவர் ஊரில் இருந்து வீட்டிற்கு வந்ததும் தன்னிலையை கூறி கதறியுள்ளார்.
இதனைக்கேட்ட கணவனோ தனது மனைவி பக்கம் நிற்காமல், மனைவியிடம் அப்பா உன்னை உடல்ரீதியாக தொடர்புகொண்டதால், நீ இன்றில் இருந்து எனது தாய் என்று கூறி வீட்டை விட்டு வெளியேற்றி இருக்கிறார்.
இதனால் பாதிக்கப்பட்ட மனைவி கணவர் மனம் மாறிவிடும் என இவ்வுளவு நாட்கள் அமைதியாக இருந்த நிலையில், குடும்பம் நடத்த கணவருக்கு அழைப்பு விடுத்தும், அவரின் தந்தைக்கு எதிராக புகார் அளிக்க நடவடிக்கை எடுக்காத காரணத்தாலும் கணவர் மற்றும் மாமனாருக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.