மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பைக் திருடி சிக்கிய சிறார்கள்: அந்தரங்க உறுப்பில் மிளகாய்பொடி தூவி கொடுமை..!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள நொய்டா, ஜேவார் பகுதியில் வசித்து வரும் இளைஞர்கள் மோஹர்பால், உத்தம், விஷால். சம்பவத்தன்று இவர்களின் தெருவில் 17 வயதுடைய இரண்டு சிறார்கள் பைக் திருடி சென்றபோது சிக்கிக்கொண்டதாக தெரியவருகிறது.
இரண்டு சிறார்களையும் பிடித்த அப்பகுதி மக்கள் கம்பத்தில் கட்டிவைத்த நிலையில், அங்கு வந்த மேற்கூறிய மூவர் கும்பல், மிளகாய்பொடியை எடுத்து சிறார்களின் அந்தரங்க உறுப்புகளில் தூவி கொடுமை செய்துள்ளது.
நீண்ட நேரத்திற்கு பின்னர் சிறார்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து, அவர்கள் வந்தபின் இருவரும் விடுவிக்கப்பட்டதாக தெரியவருகிறது. இதனிடையே, சிறார்கள் தாங்கள் அனுபவித்த துயரத்தை தெரிவித்துள்ளனர்.
இதனைக்கேட்டு அதிர்ந்துபோன பெற்றோர், சம்பவம் குறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்ற காவல் துறையினர், சிறார்களின் அந்தரங்க உறுப்புகளில் மிளகாய்பொடி தூவியதாக மோஹர்பால், உத்தம், விஷால் ஆகியோரை கைது செய்தனர். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.
ग्रेटर नोएडा के जेवर इलाके में चोरी के शक में भीड़ ने दो नाबालिग लड़कों के हाथ बांधे। उनके प्राइवेट पार्ट में लाल मिर्च पाउडर डाल दिया, पिटाई की। पीड़ित फैमिली ने मोहरपाल, उत्तम, विशाल आदि के खिलाफ शिकायत की। फिलहाल पिटने वाले दोनों लड़के ही जेल चले गए हैं। #Noida #Up pic.twitter.com/SFEMBP6W6j
— Sachin Gupta (@SachinGuptaUP) December 12, 2023