மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விடுதியில் வழங்கப்பட்ட உணவு விஷமாக மாறியதால் பகீர்; கல்லூரி மாணவர்கள் 200 பேர் மருத்துவமனையில் அனுமதி.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கிரேட்டர் நொய்டா பகுதியில் லாயிட் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் விடுதியில் தங்கியிருந்து பயின்று வரும் மாணவர்களுக்கு, கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் உணவு ஏற்பாடு செய்து தரப்படுகிறது.
இந்நிலையில், நேற்று இரவு உணவு சாப்பிட்ட மாணவர்கள் அனைவரும் தங்களின் அறைக்கு சென்றுள்ளனர். ஒருசில மணிநேரத்திற்குள் மாணவர்களுக்கு அடுத்தடுத்து உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவதிப்பட்டுள்ளனர்.
கிட்டத்தட்ட 200 க்கும் அதிகமான மாணவர்கள் உணவின் விஷத்தன்மை காரணமாக பாதிக்கப்பட, அவசர கதியில் அங்குள்ள 3 மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டனர்.
இந்த விஷயம் தொடர்பாக கல்லூரி நிர்வாகம் சார்பிலும், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சார்பிலும் விசாரணை நடந்து வருகிறது.