மேகியுடன் அரிசி சாதம் சாப்பிட்டதால் சோகம்; உணவு விஷமாக மாறி சிறுவன் பலி..!



uttar-pradesh-pilibhit-maggie-noodles-with-rice-killed

ஒருநேரத்திற்கு தானே மேகி கொடுக்கிறோம் என்று அலட்சியமாக செயல்பட்டு உங்களின் உயிருக்கு நீங்களே எமனாக அமைந்துவிடாதீர்கள்.

அழகிய குடும்பம்

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பிலிபிட் மாவட்டம், ராகுல் நகர் பகுதியை சேர்ந்த தம்பதி சீமா - சோனு, தம்பதிகளுக்கு ரோஹன், விவேக் என்ற மகன்களும், சந்தியா என்ற மகளும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் இரவு உணவு சாப்பிட மேகி வாங்கி சமைத்து இருக்கின்றனர். மேகியுடன் அவர்கள் அரிசி சாதத்தையும் சேர்த்து மேகி ரைசாக சாப்பிட்டதாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: பெண் உதவியுடன் 15 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்.. கட்டிப்போட்டு தப்பியோடிய காமுகன்கள்.!

மேகி ரைஸ் சாப்பிட்டதால் உணவு விஷமான சோகம்

இதனால் இரவு உணவை சாப்பிட்ட குடும்பத்தினர் அடுத்தடுத்து உடல்நலக்குறைவால் அவதிப்படவே, அனைவரும் மருத்துவமனையில் சென்று சிகிச்சைக்காக அனுமதியாகி இருக்கின்றனர். மருத்துவர்கள் உடனடியாக அனைவர்க்கும் சிகிச்சை அளித்த நிலையில், அதில் 10 வயது சிறுவன் ரோகன் பரிதாபமாக உயிரிழந்தார். 

சிறுவன் பலி, பிறர் உடல்நலம் முன்னேற்றம்

பிற குடும்ப உறுப்பினர்கள் சிகிச்சைக்கு பின் உடல்நலம் தேறி வரும் நிலையில், சம்பவம் தொடர்பாக ஹசாரா காவல் துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுவாக துரித உணவகத்தில் விற்பனை செய்யப்படும் மேகி போல, பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படும் மேகி உணவும் பலராலும் விரும்பி உண்ணப்படுகிறது.

ஆபத்தை விலை கொடுத்து வாங்காதீர்கள்

தனியாக சாப்பிடும் மேகியை ஆபத்தானது என மருத்துவ வல்லுநர்கள் அறிவுறுத்தி, அதனை தவிர்க்குமாறு கோரிக்கை வைக்கின்றனர். ஆனால், அதனுடன் அரிசி சாதத்தையும் சேர்த்து சாப்பிட்ட நபர்கள் குடும்பத்துடன் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு மருத்துவமனையில் அனுமதியான சம்பவத்தில் சிறுவன் உயிர் பறிபோய் இருக்கிறது.

இதையும் படிங்க: காலையிலேயே அதிர்ச்சி.. தாய், மனைவி, 3 குழந்தைகள் கொலை.. அரக்கனின் அதிர்ச்சி செயல்.!