குளிக்காமல் பள்ளிக்கு வந்த மாணவர்கள்: கடும் குளிரில் குளிக்கும் தண்டனை கொடுத்த தலைமை ஆசிரியர்.!



Uttar pradesh Principal Punished Students 

 

உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ரேபரேலி மாவட்டத்தில், சத்ரபதி சிவாஜி இன்டெர்நேஷ்னல் காலேஜ் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரி வளாகத்தில் 12ம் வகுப்பு வரையிலான பள்ளியும் செயல்பட்டு வருகிறது. 

இன்று காலை அங்கு நிலவிய கடும் குளிர் காரணமாக, பள்ளியில் பயின்று வரும் சிறார்களின் 5 பேர் குளிக்காமல் பள்ளிக்கு வந்ததாக கூறப்படுகிறது. 

இதனை கண்டறிந்த பள்ளியின் தலைமை ஆசிரியர், மாணவர்களை பள்ளி வளாகத்தில் உள்ள தொட்டியில், கடும் குளிரில் உள்ளாடையுடன் குளிக்க வைத்தார். இதுதொடர்பான வீடியோவையும் அவர் எடுத்து இணையத்தில் பதிவு செய்தார். 

தலைமை ஆசிரியரின் செயலுக்கு பெரும் கண்டனம் குவிந்துவரும் நிலையில், 18 டிகிரி குளிரில் மாணவர்களை எப்படி குளிக்க வைக்கலாம்? பெற்றோரை அழைத்து வீட்டிற்காவது அனுப்பி இருக்கலாம் என கண்டனங்கள் குவிந்து வருகின்றன.