உத்தரகாண்ட்: 10வது நாளாக தொடரும் மீட்பு பணி... சுரங்கத்தில் சிக்கியுள்ளோரின் முதல் வீடியோ வெளியீடு!!



Uttarakhand worker communicate with rescue team video goes viral

டெல்லி உத்தரகாண்டில் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக சில்க்யாரா- பர்கோட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப் பாதை அமைக்கும் பணி நடைப்பெற்று வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 12 ஆம் தேதி எதிர்பாராத விதமாக திடீரென மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த மண் சரிவில் சுரங்க பாதையில் வேலை பார்த்த 41 தொழிலாளர்கள் சுரங்க பாதையின் நடுவில் சிக்கியுள்ளனர்.

அவர்களை மீட்க மீட்பு குழுவினர் இரவு, பகலாக வேலை பார்த்து வருகின்றனர். 10வது நாளாக இன்றும் மீட்பு பணி தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் தற்போது சுரங்கப்பாதையில் சிக்கியுள்ளவர்களின் முதல் வீடியோ வெளியாகியுள்ளது. 

மீட்புக்குழுவினர் எண்டோஸ்கோபி கேமரா மூலம் சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை வீடியோ எடுத்துள்ளனர். மேலும் அவர்களுடன் வாக்கி டாக்கி மூலம் பேசியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.