மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கொடூரம்.. எலியை பிடித்து பைக்கில் கட்டி இளைஞர் செய்த காரியம்... வைரலாய் பரவும் வீடியோ.!
உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நபர் பைக் ஏற்றி எலியை கொலை செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது .
உத்திரபிரதேசம் மாநிலத்தின் நொய்டா நகரைச் சேர்ந்த சைனுல் அங்கு பிரியாணி கடை நடத்தி வருகிறார். அவரது கடைக்குள் நுழைந்த எலியை பிடித்து தனது மோட்டார் சைக்கிளுக்கு அடியில் வைத்து கொடூரமாக நசுக்கி கொலை செய்திருக்கிறார்.
இந்த சம்பவத்தை வீடியோ எடுத்த ஒருவர் சமூக வலைதளங்களில் அதனை பரப்ப அந்த வீடியோவிற்கு எதிராக பல்வேறு வகையான கண்டனங்கள் எழுந்துள்ளன. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அந்த நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
नोएडा में चूहे का मर्डर
— Privesh Pandey (@priveshpandey) July 24, 2023
बिरयानी वाले ने बाइक से कुचला
पुलिस ने किया गिरफ्तार
वीडियो सोशल मीडिया पर वायरल@noidapolice pic.twitter.com/U2W5RQ3KNE
சிறிய உயிர்களிடத்தில் கூட இரக்கம் காட்டாமல் கொடூரமாக நடந்து கொண்டதாக அந்த இளைஞரை பலரும் குற்றம் சாட்டினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி இருக்கிறது. கைது செய்யப்பட்ட நபருக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.