பானைக்குள் மாட்டிக்கொண்ட சிறுவனின் தலை! சினிமா காட்சி போல் நடந்த கேரளா சம்பவம்.



Vessel locked in kerala kid head

கேரளா மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்தவர் ஆபிரகாம். இவரது மனைவி ஜிஜி. இவர்களுக்கு 3 வயதில் பியான் என்ற மகன் உள்ளான். இந்நிலையில் பியான் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தபோது அருகில் இந்த பாத்திரம் பானை ஒன்றை எடுத்து விளையாட்டுத்தனமாக தலையில் மாட்டியுள்ளான்.

இதில் அந்த பானை பியானின் தலையில் மாட்டிக்கொண்டது. பானையை வெளியே எடுக்க முடியாமல் பியான் அழுதுள்ளான். குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஒடி வந்த உறவினர்கள் குழந்தையின் தலையில் மாட்டியிருந்த பானையை வெளியே எடுக்க முயற்சித்து அவர்களாலும் அந்த பானையை வெளியே எடுக்க முடியவில்லை.

Mystry

இதனை அடுத்து சிறுவனை மோட்டர் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு அருகில் இருந்த தீயணைப்பு நிலையத்திற்கு கொண்டு சென்றுள்னனர். அந்த பானையை கத்தியால் அறுத்து தீயணைப்பு வீரர்கள் பானையை வெளியே எடுத்து குழந்தையை மீட்டுள்னனர்.

சினிமா காட்சி போல் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியதாக பிரபல மலையாள செய்தி ஊடகம் ஓன்று செய்தி வெளியிட்டுள்ளது.