திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
திடீரென விமானத்திற்குள் புகுந்த புறா.! அதன்பின் நடந்த சம்பவம்.! வைரல் வீடியோ.!
புறப்பட தயாராக இருந்த விமானத்திற்குள் திடீரென புறா ஓன்று உள்ளே வந்ததால் விமானம் 30 நிமிடம் தாமதமான சம்பவம் ஜெய்ப்பூரில் நடந்துள்ளது. அகமதாபாத் ஜெய்ப்பூர் இடையிலான கோ-ஏர் பயணிகள் விமானம் ஓன்று பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்துள்ளது.
விமானம் புறப்படும் சில நிமிடங்கள் முன்பு புறா ஓன்று விமானத்திற்குள் புகுந்துள்ளது. உள்ளே புகுந்த விமானம் விமானத்திற்குள் அங்கும் இங்கும் பறந்து சற்று நேரம் அனைவர்க்கும் வேடிக்கை காண்பித்தது. விமானத்தில் உள்ளே இருந்த பயணிகள் சிலர் புறாவை பிடிக்க முயற்சித்தனர்.
ஆனால், யாராலும் புறாவை பிடிக்க முடியவில்லை. இந்த பாரதத்தில் விமானம் 30 நிமிடம் தாமதமானது. ஒருவழியாக புறா அதுவாகவே விமானத்தில் இருந்து வெளியேறி சென்றது. ஆனால், புறா எப்படி விமானத்திற்குள் வந்தது என்று தற்போது வரை யாருக்கும் தெரியவில்லை. இந்த சம்பவம் விடீயோவாக வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகிவருகிறது.
Video of two pigeons found in Ahmedabad-Jaipur @goairlinesindia flight is going viral.
— Prathap ಕಣಗಾಲ್ (@Kanagalogy) February 29, 2020
Now all Airlines should ban Pigeons from flying, considering safety and personal space of other passengers.
pic.twitter.com/wqghyDLHcJ