மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகை ராஷ்மிகாவுடன் காதலா?.. "அது எனக்கு ஓகே தான்., மத்தவங்க பேசுறத பத்தி எனக்கு கவலையில்லை" - விஜய் தேவரகொண்டா ஓபன்டாக்..!!
டோலிவுட்டில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. இவர் தற்போது லைகர் படத்தின் பிரமோஷன் பணிகளில் பிஸியாக இருக்கிறார். மேலும் அவர் பாலிவுட் நடிகை அனன்யா பாண்டேவுடன் இணைந்து பிரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த படம் வரும் ஆகஸ்ட் 25-ஆம் தேதி வெளியாகும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சமீபத்திய ஒரு பேட்டியில் விஜய் தேவரகொண்டாவிடம் அவர் ராஷ்மிகாவை காதலிப்பதாக கூறிய கிசுகிசு குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு விஜய் தேவரகொண்டா, "மக்கள் என்னை விரும்புவதால் எனது சொந்த வாழ்க்கை குறித்தும் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். என்னை பற்றிய செய்திகள் வெளிவருவது எனக்கு ஓகே தான்.
என்னை பற்றி எதுவும் செய்திகள் வராமல் இருப்பதற்கு ஏதாவது ஒரு ஆர்டிகிளில் கிசுகிசுவாவது வருவதும் நல்லது தானே. அதனால் மற்றவர்கள் பேசுவது குறித்தெல்லாம் நான் கவலைப்படுவதில்லை" என்று விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார்.