தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
மக்களே உஷார்.. இது இல்லாமல் இனி வெளியே சென்றுவிடாதீர்கள்.. அதிரடி ஆப்பு தான்.. கவனம்..!
இந்தியா முழுவதும் வெகுவாக குறைந்திருந்த கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. டெல்லியில் முதலிலேயே கொரோனா பரவல் பலருக்கும் உறுதி செய்யப்பட்டு, அதனை தடுக்க வேண்டிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீண்டும் முகக்கவசம் போன்றவற்றை அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று மாநில முதல்வர் மு.க ஸ்டாலின் சுகாதாரத்துறை வல்லுனர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு, முகக்கவசத்தை பொது இடங்களில் அணிய மக்களுக்கு அறிவுறுத்தி இருந்தார்.
இந்நிலையில், கர்நாடகா மாநிலத்திலும் கொரோனா அதிகரித்து வருவதால், அதனை தடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் சுகாதாரத்துறையினருடன் ஆலோசனை நடந்தது. அதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில், "கொரோனா 4 ஆம் அலைபரவலை தடுக்க கர்நாடக மாநிலத்தில் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசனை நடந்தது.
அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற அறிவிப்பு மீண்டும் செயல்படுத்தப்படும். இரயில் நிலையம், பேருந்து நிலையம் மற்றும் மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க இப்போதைக்கு திட்டமில்லை. வரும் நாட்களில் அது குறித்த முடிவுகள் எடுக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டது.