#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
உதவுவதாக நடித்து கொடூரம்.. 15 வயது சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்காரம்.. அரங்கேறிய பயங்கரம்.!
சந்தைக்கு சென்ற சிறுமிக்கு உதவி செய்வதாக கூறி ரிக்சா ஓட்டுநர், தனது நண்பருடன் சேர்ந்து சிறுமியை கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள புர்பா பர்தமான் மாவட்டத்தை சார்ந்த 15 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இவர் சம்பவத்தன்று சந்தைக்கு சென்றுகொண்டு இருந்துள்ளார்.
இதன்போது, அவ்வழியாக ரிக்சாவில் வந்த தொழிலாளி, மாணவியிடம் நானும் சந்தைக்கு செல்கிறேன். உன்னை கொண்டு சென்று விடுகிறேன் என்று தெரிவித்துள்ளார். ரிக்சா தொழிலாளியின் வார்த்தையை நம்பிய சிறுமியும், ரிக்சாவில் ஏறியுள்ளார்.
ரிக்சா சிறிது தூரம் சென்றதும், ரிக்சா ஓட்டுனரின் நண்பன் அதில் ஏறி பயணித்துள்ளார். இதனையடுத்து, இருவரும் சேர்ந்து மாணவியை ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு, இருவரும் சேர்ந்து மாணவியை கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்து தப்பியோடிய நிலையில், மாணவி கண்ணீருடன் சந்தை பகுதிக்கு வந்து நடந்ததை கூறியுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்தவர்கள், சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பெற்றோர் மகளிடம் நடந்ததை கேட்டறிந்து, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், ரிக்சா ஓட்டுனரை கைது செய்தனர். அவரது நண்பரையும் தேடி வருகின்றனர்.