மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பாலத்திற்கு அடியில் வெடிகுண்டு; தக்க சமயத்தில் கிடைத்த தகவலால் உயிர்சேதம் தவிர்ப்பு.!
மேற்குவங்கம் மாநிலத்தில் உள்ள சிலிகுரி, கொலாஸ்ந்த் பாப்ரி ஆற்றுப்பாலத்தின் கீழே நாட்டு வெடிகுண்டுகள் கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் சோதனை நடத்திவிட்டு, வெடிகுண்டு மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள், நாட்டு வெடிகுண்டை மீட்டு செயலிழக்கவைத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக 3 பேரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடந்து வருகிறது.
மேற்குவங்கம் மாநிலத்தில் ஏப்ரல் 19ம் தேதி முதல் 2024 மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்குகிறது. இவ்வாறான தருணத்தில் பதற்றத்தை ஏற்படுத்துவது போல இச்சம்பவம் நடந்துள்ளது.
தக்க தருணத்தில் வெடிகுண்டு குறித்த தகவல் கிடைக்கப்பெற்ற காரணத்தால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.