தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
#Breaking: ஊரடங்கில் மேலும் பல்வேறு தளர்வுகள் அறிவிப்பு.. கொண்டாட்டத்தில் மக்கள்.!
இந்தியா முழுவதும் அதிகரித்த ஒமிக்ரான் அலை பரவலால், அந்தந்த மாநில அரசுகள் சார்பில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தற்போது, கொரோனா பரவல் குறைந்ததாக அரசு சார்பில் தரவுகள் சமர்ப்பிக்கப்பட்டு வரும் நிலையில், மக்களுக்கு பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
மேற்கு வங்கம் மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு போன்றவை அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளார். இதுதொடர்பான அறிவிப்பில், "பிப். 3 ஆம் தேதி முதல் 8 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும்.
மும்பை - கொல்கத்தா, டெல்லி - கொல்கத்தா விமான சேவைகள் தினமும் அனுமதிக்கப்படும். கொல்கத்தா - இங்கிலாந்து விமான சேவையும் மீண்டும் தொடங்கப்படும். வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் ஆர்.டி.பி.சி.ஆர் கொரோனா பரிசோதனை சான்றிதழை வைத்திருக்க வேண்டும்.
இரவு நேர ஊரடங்கு இரவு 10 மணிமுதல் காலை 5 மணிவரை அமல்படுத்தப்பட்டு இருந்த நிலையில், இரவு ஊரடங்கு நேரம் 11 மணிமுதல் காலை 5 மணிவரை என மாற்றப்படுகிறது. பார்கள், ரெஸ்டாரண்ட், சினிமா தியேட்டர் போன்றவை 75 % வடிக்கையாளருடன் செய்யப்பட அனுமதி வழங்கப்படும். சுற்றுலா தளங்கள் மற்றும் பூங்காக்கள் கொரோனா வழிகாட்டுதலின்படி திறக்க அனுமதி வழங்கபடுகிறது" என்று தெரிவித்தார்.