மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இந்த சளி மருந்தை குழந்தைக்கு கொடுக்குறீங்களா?.. கிட்னி செயலிழந்து 66 குழந்தைகள் உயிரிழப்பு.. உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை.!
இந்திய மருந்து நிறுவனத்தின் மருந்தால் 66 குழந்தைகள் உயிரிழந்துவிட்ட நிலையில், அம்மருந்தை உபயோகத்தில் இருந்து விலக்க உலக சுகாதார அமைப்பு ஆணையிட்டுள்ளது.
இருமல் மற்றும் சளி மருந்துகளை தயாரித்து வரும் மெய்டன் பாராசூட்டிகள் நிறுவனத்தின் மருந்து சர்வதேச அளவில் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இது இந்திய நிறுவனம் ஆகும்.
இந்த நிலையில், ஆப்பிரிக்க நாட்டுக்கு மருந்துகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள காம்பியா நாட்டில் 66 குழந்தைகள் சளி மற்றும் இருமலுக்கு மெய்டன் மருந்தை உபயோகம் செய்துள்ளனர்.
இவர்கள் அடுத்தடுத்து நோய்வாய்ப்பட்டு உயிரிழந்த நிலையில், ஆய்வில் சிறுவர்கள் உபயோகம் செய்த மருந்து கிட்னி பாதிப்பை ஏற்படுத்தி சிறார்களின் உயிரை பறித்தது அம்பலமானது.
இதனையடுத்து, Maiden Pharmaceuticals இருமல் மருந்துகளை பயன்பாட்டில் இருந்து அகற்ற உத்தரவிட்டுள்ள உலக சுகாதார அமைப்பு, மருந்துகளை உபயோகம் செய்ய வேண்டாம் என்று எச்சரித்துள்ளது.