இந்தியாவில் கொரோனா 3வது அலை எப்போது.? உலக சுகாதார அமைப்பு என்ன கூறியுள்ளது.?



who talk about corona third wave

உலகத்தையே உலுக்கிவரும் கொரோனா வைரஸ் கடந்த ஓராண்டுக்கும் மேலாக கடுமையான பாதிப்பையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. நாடு முழுவதும் கொரோனா பரவலின் 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது.  இந்தியாவில் கொரோனா பாதிப்பினால் நாள்தோறும் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தும் வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனா பரவல் முதல் அலையை விட 2வது அலை அதி தீவிரமாக பரவி, ஒரு நாளைக்கு 4 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் கூட பாதிக்கப்பட்டு வந்தனர். தற்போது தினசரி கொரோனா பாதிப்புகள் படிப்படியாக குறைந்து 1.65 லட்சமாக பதிவாகி வருகிறது. இந்தியாவில் 2வது அலையில் இளைஞர்களுக்கு அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தியது. 

corona

இதற்கிடையே 3வது அலை இதைவிட தீவிரமாகவும் இருக்கும் எனவும், குழந்தைகளை அதிகளவு தாக்கும் எனவும் மருத்துவர்கள் கூறிவந்தனர். இந்நிலையில் அடுத்த அலையை கணிக்க இயலாது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் கூறுகையில், இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் சுகாதார சேவைகளுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நாட்டின் சில பகுதிகளில் தொற்று குறைந்து வருவதை பார்க்கிறோம். ஆனாலும், சூழ்நிலை தொடர்ந்து சவாலாகவே உள்ளது. எனவே, நாம் முதலில் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். கொரோனாவின் அடுத்த அலையை நாம் கணிக்க முடியாது, ஆனால் அதைத் தடுக்க முடியும். அதை நாம் கட்டாயம் செய்வோம் என தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.