மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடக்கொடுமையே இதுக்கெல்லாமா? கணவரிடம் விவாகரத்து கேட்ட இளம்பெண்! காரணத்தைக் கேட்டா தலைச்சுற்றி போயிருவீங்க..
பீகார் மாநிலம் விஷாலி மாவட்டத்தில் வசித்து வருபவர் மனிஷ் ராம். இவரது மனைவி சோனி தேவி. இவர்களுக்கு கடந்த 2017ல் திருமணம் நடைபெற்றது. மேலும் அவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் சோனி தேவி அண்மையில் அம்மாநில பெண்கள் கமிஷனரிடம் தனது கணவர் மனீஷ் ராம் மீது புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.
அதில் தன் கணவர் மனிஷ் ராம், நடவடிக்கை எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. மேலும் அவர் 10 நாளாக குளிக்கவில்லை. பல்துலக்கவில்லை, அவரது தாடியும் ஷேவ் செய்யவில்லை. அதனை என்னால் சகித்து கொள்ளமுடியவில்லை. எனக்கு அவருடன் வாழவே பிடிக்கவில்லை எனக்கு அவரிடமிருந்து விவாகரத்து பெற்று தாருங்கள் கேட்டுள்ளார்.
இந்நிலையில் இது குறித்து மாநில மகளிர் கமிஷன் உறுப்பினர் கூறியதாவது, விவாகரத்து பெறுவதற்காக சோனி கூறிய காரணங்கள் மிகவும் சாதாரணமாக உள்ளது. அவருக்கு கவுன்சிலிங் கொடுத்துள்ளோம். மேலும் 2 மாசம் அவகாசம் கொடுத்துள்ளோம். அவருக்கு எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றால் மேல்நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.