திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கள்ளக்காதலனுடன் உல்லாச வாழ்க்கை.. இடையூறாக இருந்த கணவனுக்கு சமாதி கட்டிய மனைவியின் பரபரப்பு செயல்..!
கள்ளக்காதலுக்கு பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக மனைவி, தனது கணவனை கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பால்கர் மாவட்டத்தின் நெடுஞ்சாலையில் ஆண் சடலம் ஒன்று உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின் விசாரணை மேற்கொண்ட நிலையில், இறந்த நபர் கோபட் பகுதியில் வசித்து வந்த தினேஷ் பஞ்சால் என்பதும், இவரின் மனைவி ஷீத்தர் என்பதும் தெரியவந்தது
இதனைத்தொடர்ந்து, கணவரின் மரணம் குறித்து மனைவியிடம் விசாரணை நடத்தியபோது, ஷீத்தல் நரேஷ் போதானி என்ற வாலிபருடன் தொடர்பில் இருந்துள்ளார். இதனையறிந்த கணவன் மனைவியை கண்டித்துள்ளார். இருப்பினும், கணவன் கூறியதை கண்டுகொள்ளாத ஷீத்தல் மீண்டும் அதே நபருடன் பழகி வந்துள்ளார். இதனால், கணவன் மற்றும் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி சண்டை வந்துள்ளது.
ஒரு கட்டத்தில் கணவரால் இந்த உறவுக்கு இடையே பிரச்சனை வந்து விடுமோ? என எண்ணிய ஷீத்தல், பிரச்சனையாக இருக்கும் கணவரை கொன்றுவிட்டால் என்ன? என்ற திட்டத்தை நரேஷ் போதனுக்கு கூறியிருக்கிறார். இதனையடுத்து கணவனை கொலை செய்ய இருவரும் திட்டமிட்டிருக்கின்றனர். நரேஷ் போதனி தனது நண்பர்களான சதிஷ் ஹவ்சரே,அஜய் மாதேரா, ராகேஷ் போன்றோருடன் சேர்ந்து திட்டமிட்டு தினேஷ் பஞ்சாலை கொலை செய்துவிட்டு, உடலை சாலையில் வீசிச் சென்றுள்ளனர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
தினேஷ் பஞ்சாலை கொலை செய்ததற்காக மனைவி மற்றும் நரேஷ் போதனி, அவரது நண்பர்கள் 3 பேர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.