ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
ஏங்க போனா... ஏன் நைட் வர இவ்வளோ லேட் ஆச்சு... அடுக்கடுக்காக கேள்வி கேட்ட கணவர் மீது ஆசிட் வீசிய மனைவி!!
உத்திரப் பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கூப்பர் கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் தப்பு குப்தா - பூனம் தம்பதியினர். இந்நிலையில் தப்பு குப்தா தினமும் குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். சம்பவத்தினத்தன்று பூனம் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு தாமதமாக வந்துள்ளார்.
இதனையடுத்து தப்பு குப்தா மனைவியிடன் இவ்வளவு நேரம் எங்கு சென்றாய், ஏன் வருவதற்கு இவ்வளவு தாமதம் ஆனது என்று கேள்விக்கு மேல் கேள்வி கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பூனம் பாத்ரூம் சுத்தம் செய்ய வைத்திருந்த ஆசிட்டை எடுத்து வந்து தப்பு குப்தா முகத்தில் ஊற்றியுள்ளார்.
ஆசிட் பட்டதும் வலி தாங்க முடியாமல் அலறி துடித்துள்ளார். குப்தாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து குப்தாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைக்கவே போலீசார் குப்தாவிடம் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
விசாரணையில் தப்பு குப்தா தன் மீது ஆசிட் வீசிய பூனம் மீது அதிரடி நடவடிக்கை எடுக்க கோரியுள்ளார். அதனையடுத்து போலீசார் பூனத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.