மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அப்படி என்னடா பாவம் பண்ணிட்டா.? 6 துண்டுகளாக வெட்டி வீசப்பட்ட புதுப் பெண்... நடந்தது என்ன.? காவல்துறை விசாரணை.!
ஒடிசா மாநிலத்தில் நகையை அடகு வைக்க தர மறுத்ததால் மனைவி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கணவரை கைது செய்திருக்கும் காவல்துறையினர் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒடிசா மாநிலத்தில் உள்ள கஞ்சம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 28 வயதான நாராயன் முலி. இவர் கூலி தொழிலாளியாக இருந்து வருகிறார். இவருக்கும் ஜாகிலிபதார் கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது மனைவி காணாமல் போய்விட்டதாக தனது மாமியார் மற்றும் காவல்துறையிடம் தெரிவித்திருக்கிறார் நாராயண் முலி. இதில் சந்தேகமடைந்த அவரது மனைவியின் தாயார் காவல்துறையிடம் நாராயண் மீது புகார் அளித்தார்.
இந்த புகாரை தொடர்ந்து நாராயண் முலி கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையின் முடிவில் தனது மனைவியை கொலை செய்து ஆறு துண்டுகளாக வெட்டி ஆற்றில் வீசியதை ஒப்புக்கொண்டார் நாராயண் முலி. தொழில் தொடங்குவதற்காக மனைவியிடம் அவரது நகையை அடகு வைத்து பணம் தரும்படி கேட்டதாகவும் அதற்கு மறுத்ததால் ஆத்திரத்தில் மனைவியை கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
பின்னர் கொலையை மறைப்பதற்காக அவரது உடலை ஆறு துண்டுகளாக வெட்டி ஆற்றில் வீசியதாக தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆற்றில் இறங்கி கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் உறுப்புக்களை தேடி வருகின்றனர். இந்தக் கொலை சம்பவம் அப்பகுதியில் பெறும் பதற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.