#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மருத்துவமனை கழிவறையில் குழந்தை பிரசவம்.! புகார் கொடுத்த குடும்பத்தினர்.!
கேரள மாநிலம் திருச்சூர் குன்னமங்கலம் பகுதியை சேர்ந்த பிரவீன் என்பவரின் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்தநிலையில் அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால் உறவினர்கள் குன்னமங்கலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்துள்ளனர்.
ஆனால் அப்போது மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் செவிலியர்கள், அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர் மருத்துவமனை வார்டில் அனுமதிக்கப்பட்டார். அவர் வார்டில் இருந்த போது அவர் கழிவறைக்கு சென்றுள்ளார். திடீரென அவருக்கு அங்கு பிரசவ வலி ஏற்பட்டு குழந்தை பிறந்துள்ளது.
திடீரென கழிவறைக்குள் இருந்த பெண்மணியின் சத்தம் கேட்டு மருத்துவமனை ஊழியர்கள் உள்ளே சென்று அவரை மீட்டுள்ளனர். சிறிது அந்த பெண்ணுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் உடனே அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இந்தநிலையில், பெண்ணின் உறவினர்கள் இது தொடர்பாக மருத்துவத்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.