ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
குஜராத் மாநிலத்தில் 2 மூக்குடன் பிறந்த அதிசய குழந்தை... கூட்டம் கூட்டமாக வந்து பார்த்துச் செல்லும் மக்கள்.!
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு அதிசய குழந்தை பிறந்த சம்பவம் நாடு முழுவதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அந்தக் குழந்தையை உறவினர்கள் மட்டுமல்லாது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்து பார்த்து செல்கின்றனர் .
குஜராத் மாநிலம் சபர் காந்தா மாவட்டத்தில் பெண் ஒருவர் குழந்தையை பெற்றெடுத்தார். அந்தக் குழந்தையை பார்த்த மருத்துவர்கள் மற்றும் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். குழந்தை இரண்டு மூக்குடன் பிறந்திருக்கிறது.
ஹிம்மத் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிறந்த குழந்தை தற்போது தரமான சிகிச்சைக்காக வேறு ஒரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருக்கிறது. இந்த குழந்தை குறித்து கருத்து கூறிய மருத்துவர்கள் 8000 முதல் 15,000 குழந்தைகளில் ஒருவருக்கு இப்படி இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
தற்போது குழந்தையின் உடல்நிலை மிகவும் சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். அதிசய குழந்தையை உறவினர்கள் மட்டுமல்லாது அந்த ஊரைச் சார்ந்தவர்களும் மருத்துவமனையில் வந்து பார்த்து வாழ்த்தி செல்கின்றனர்.