#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வாகனத்தில் லிப்ட் கொடுக்க மறுத்ததால் 35 வயது பெண் மீது ஆசிட் வீச்சு?.. இளைஞன் பரபரப்பு செயல்.!
வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுகொண்டு இருந்த பெண்ணை இடைமறித்து இளைஞன் ஆசிட் வீசிய பயங்கரம் நடந்துள்ளது.
அசாம் மாநிலத்தில் உள்ள சோனித்பூர் மாவட்டத்தில் 35 வயதுடைய பெண்மணி தனது இருசக்கர வாகனத்தில் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிக்கொண்டு இருந்துள்ளார்.
அவர் தேயிலை தோட்டம் வழியே சென்றபோது, இளைஞன் பெண்ணை மறித்து வாகனத்தை நிறுத்தச்சொல்லியுள்ளார். பெண் மறுப்பு தெரிவித்து அங்கிருந்து புறப்பட்டு செல்ல முயற்சித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் பெண்ணின் மீது ஆசிட் வீசி தாக்குதல் நடத்தியுள்ளார். இதனால் பெண் தலை, கழுத்து, காதுகளில் படுகாயம் அடைந்து அலறித்துடித்துள்ளார்.
இளைஞர் அங்கிருந்து தப்பி சென்றுவிடவே, பெண்ணை மீட்ட பொதுமக்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, அதிகாரிகள் இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.