திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள்.! சற்று நேரத்தில் டாக்டர் கொடுத்த ஷாக் ரிப்போர்ட்..!
மத்திய பிரதேசத்தில் பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகள் பிறந்துள்ள அதிசயம் நடந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரத்தில் உள்ள பரோடா என்னும் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி மாலிக். 22 வயதான இவர் பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனை அடுத்து மூர்த்தி மாலிக்கிற்கு சுக பிரசவம் மூலம் அடுத்தடுத்து 6 குழந்தைகள் பிறந்துள்ளது. ஆனால், பிறந்த குழந்தைகள் அனைத்தும் 500 கிராம் முதல் 790 கிராம் எடை மட்டுமே இருந்துள்ளது. ஆறு குழந்தைகளின் மொத்த எடையே 3.65 கிலோதான் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதில், 350 கிராம் முதல் 400 கிராம் வரை இருந்த இரண்டு குழந்தைகள் இறந்துவிட்டது. இதுகுறித்து பேசிய மகளிர் மருத்துவத் துறையின் தலைவர் கூறுகையில், இது மிகவும் அரிதான பிரசவம். கோடிகளில் ஒருவருக்குத்தான் இதுபோன்று நடக்கும் என்றும், 30 ஆண்டுகளில் இதுபோன்ற ஒரு பிரசவத்தை தான் பார்த்ததே இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், மற்ற குழந்தைகளின் எடையும் மிக குறைவாக இருப்பதால் உயிர் பிழைக்கும் வாய்ப்பு குறைவு என அவர் தெரிவித்துள்ளார்.