பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
இரவு முழுவதும் பப்ஜி விளையாடிய சிறுவன் அதிகாலையில் அகால மரணம்..! சிறுவனின் விபரீத முடிவால் கதறும் பெற்றோர்..!
இரவு முழுவதும் பப்ஜி விளையாடிய சிறுவன் காலையில் தூக்கில் சடலமாக தொங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் காந்தி காலனி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவன் தனது தாய் மற்றும் சகோதரனுடன் வசித்துவந்துள்ளான். இவரது தந்தை ராணுவத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் பப்ஜி விளையாட்டை பதிவிறக்கம் செய்து விளையாட தொடங்கியுள்ளான் அந்த சிறுவன்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் தனது சகோதரனின் அறையில் பப்ஜி விளையாடிவிட்டு அதிகாலையில் தூங்க சென்ற சிறுவன் காலையில் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளான். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றியுள்ளனர்.
மேலும், தற்கொலைக்கு முன் சிறுவன் கடிதம் ஏதும் எழுதி வைத்துள்ளான என போலீசார் சோதனை செய்ததில் கடிதம் ஏதும் கிடைக்கவில்லை. இந்நிலையில் சிறுவனின் மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அச்சிற்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.