#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஐஸ் கிரீமில் விஷம் கலந்து கொடுத்த இளைஞன்! உடன்பிறந்த சகோதரி மரணம்! உயிருக்கு போராடும் பெற்றோர்! அதிர்ச்சி பின்னணி!
கேரள மாநிலம் காசரகோடு மாவட்டத்தில் கடந்த ஜூலை 5 ஆம் தேதி 16 வயது நிரம்பிய இளம்பெண் ஆன்மேரி என்பவர் அவரது சகோதரர் ஆல்பின் பென்னி வாங்கி கொடுத்த ஐஸ் கிரீமை சாப்பிட்டு மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனை சேர்ப்பிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்தார்.
மேலும் 22 வயதான ஆல்பின் பென்னியின் பெற்றோரும் அதே ஐஸ் கிரீம் சாப்பிட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில் ஆன்மேரி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொள்ள தொடங்கினர். அதில் ஆன்மேரி சாப்பிட்ட ஐஸ் கிரீமில் விஷம் கலந்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் ஆல்பின் பென்னியிடம் மீண்டும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் ஆல்பின் பென்னி உண்மையை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. தமது பணத் தேவைக்காக பெற்றோர் சகோதரி உள்ளிட்ட அனைவரையும் கொலை செய்துவிட்டு, சொத்துக்கள் அனைத்தையும் விற்பதே இலக்காக இருந்ததாக ஆல்பின் பென்னி போலீசாரிடம் தெரிவித்துள்ளான். ஆல்பின் பென்னியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.