திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கள்ளக்காதலுக்கு நான் வேணும், திருமணத்துக்கு வேண்டாமா?: இளைஞர் மீது ஆசிட் வீசி தாக்குதல் நடத்திய இளம்பெண்.!
பீகார் மாநிலத்தில் உள்ள வைஷாலி பகுதியைச் சார்ந்த பெண்மணி சரிதா குமாரி. இவருக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி, தற்போது இரண்டாவது கணவருடன் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
அவருக்கு மூன்று குழந்தைகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் அதே பகுதியைச் சார்ந்த தர்மேந்திர குமார் என்ற இளைஞருடன் சரிதாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதல் வயப்பட்டு தனிமையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே சரிதா குமாரியுடன் கொண்ட பழக்கத்தை திடீரென கைவிட்ட தர்மேந்திர குமார் வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய நிச்சயதார்த்தம் செய்துள்ளார்.
திருமணத்திற்கு இன்னும் பத்து நாட்கள் இருக்கும் நிலையில், இந்த தகவலறிந்து ஆத்திரமடைந்த பெண்மணி, தனது கணவருடன் சேர்ந்து தர்மேந்திரகுமாரின் முகத்தில் ஆசிட் வீசி தாக்குதல் நடத்தினார்.
இந்த தாக்குதலில் பலத்த காயத்தால் படுகாயமடைந்த தர்மேந்திர குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது வாக்குமூலத்தை வைத்து அதிகாரிகள் சரிதா குமார் மற்றும் அவரது இரண்டாவது கணவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.