இதுதாங்க நடந்துச்சு.. சொமாட்டோ ஊழியர் மூக்கை உடைத்ததாக பெண் கூறிய புகாரில் ஊழியர் பரபரப்பு விளக்கம்..



Zomato employee explain about bangalore women complaint

சொமாட்டோ ஊழியர் தன்னை தாக்கியதாக இளம் பெண் கூறிய புகாரில் என்ன நடந்தது என்பது குறித்து சொமாட்டோ ஊழியர் விளக்கமளித்துள்ளார்.

சொமாட்டோவில் ஆர்டர் செய்த உணவை தாமதமாக கொண்டுவந்தது குறித்து கேள்வி எழுப்பியபோது, டெலிவரி செய்ய வந்த காமராஜ் என்ற சொமாட்டோ ஊழியர் தனது மூக்கை உடைத்து, தன்னை தாக்கியதாக பெங்களூருவை சேர்ந்த ஹிதேச சந்திரானீ என்கிற பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

zomato

இந்நிலையில் என்ன நடந்தது என்பது குறித்து போலீசார் காமராஜிடம் விசாரித்தபோது, உணவுக்கான பணத்தை அந்த பெண் தர மறுத்ததாகவும், ஆர்டர் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக தனக்கு தகவல் வந்ததால், உணவை திருப்பி கேட்டபோது அதற்கும் அவர் மறுத்ததாகவும் ஊழியர் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த பெண்ணை தன்னை திட்டியதோடு, அவரது செருப்பை எடுத்து தன்னை தாக்கியதாகவும், அதனை தான் தடுக்க முயற்சித்தபோது அவரது கையில் இருந்த மோதிரம் அவரது மூக்கில் பட்டு அவருக்கு இரத்தம் வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் சம்மந்தப்பட்ட சொமாட்டோ ஊழியருக்கு ஆதரவாக நெட்டிசன்கள் டிவிட்டரில் #Men Too என்ற ஹாஷ்டாக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.