தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
என்ன வெல்லத்தில் கஷாயமா.? புதுசா இருக்கே நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.!
இயற்கையாக தயாரிக்கப்படும் வெல்லத்தில் பொட்டாசியம், மெக்னீசியம், இரும்புச்சத்து போன்ற பல்வேறு சத்துக்கள் உள்ளன. அத்துடன் தொண்டை வலி மற்றும் தொண்டை எரிச்சலையும் குணப்படுத்தும் தன்மை கொண்டது வெல்லம்.
இதுகுறித்து மருத்துவ நிபுணர்கள் நாளொன்றுக்கு குறைந்தது 3 முறை சிறு அளவிலான வெல்லம் சாப்பிட்ட பின்னர் ஒரு டம்ளர் தண்ணீரை பருக வேண்டும். என்று தெரிவிக்கிறார்கள். இப்படி தொடர்ந்து செய்து வந்தால், சுவாச பாதையிலிருக்கின்ற அசுத்தப்படுத்தும் பொருட்களை வெளியேற்ற உதவி புரிவதாக சொல்லப்படுகிறது.
மேலும் இது சுவாச பாதையில் வீக்கமிருந்தால், அதனை குறைக்கிறது. உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவி புரிவதோடு, அஜீரணம், மலச்சிக்கல் போன்றவற்றையும் சரி செய்கிறது. இதிலுள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட் மாசுபாட்டிலிருந்து நம்முடைய நுரையீரலை பாதுகாக்கின்றது.
எவ்வாறு பயன்படுத்தலாம்
வெல்லத்தோடு, சூடான தண்ணீர், இஞ்சி, துளசி இலைகள் ஆகியவற்றை சேர்த்து பருகி வந்தால், கண், மூக்கு குறித்த அனைத்து விதமான நோய்களும் குணமாகும். இருமல், தொண்டை எரிச்சல் போன்றவற்றை தடுத்து இது நல்ல நிவாரணியாக இருக்கும்.
அதேபோல ஒரு டீஸ்பூன் மஞ்சள் பொடி, ஒரு டீஸ்பூன் நெய், வெல்லம் ஆகியவற்றை சேர்த்து எடுத்துக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. இந்த வெல்லத்தில் அதிகளவில் இரும்பு சத்து உள்ளதால், இதை சாப்பிடுபவர்களுக்கு இரத்த சோகை வரவே வராது என்று கூறப்படுகிறது.