பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரியான கணவர்.! முதல் நாளே நடிகை சுஜா வருணி போட்ட பதிவு.!
உங்க வீட்டில் அனைவரும் ஒரே சோப், துண்டு உபயோகம் செய்கிறீர்களா?.. இந்த செய்தி உங்களுக்குத்தான்...!
நம்மில் குடும்பமாக வசித்து வரும் பலரும் பெரும்பாலும் வீட்டில் ஒவ்வொருவருக்கும் என தனியாக துண்டு, உடை, பல்துலக்கும் பிரஸ் போன்றவை வைத்திருந்தாலும், சோப்பு விஷயத்தில் சிலர் அலட்சியமாக செயல்படுவார்கள்.
6 நபர்கள் உள்ள ஒருசில குடும்பத்தில் 2 சோப் வாங்கி தலா 3 பேருக்கு ஒரு சோப் என உபயோகம் செய்வார்கள். உடலில் படர்தாமரை, தேமல் உட்பட சில பிரச்சனை உள்ளோர் மட்டும் தனியாக சோப்பு வைத்துக்கொள்வார்கள்.
ஆனால், ஒவ்வொருவரும் தனியாக சோப் பயன்படுத்தலாமா? இதனால் ஏதும் பிரச்சனை வராதா? என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். சோப்களை பொறுத்தமட்டில் அவற்றில் கிருமி நாசினி சேர்க்கப்பட்டு இருக்கும் என்பதால் பாக்டீரியா குறித்து பயம் கொள்ள தேவை இல்லை.
அனைவரும் விரும்பம் இருப்பின் குடும்பத்தினர் உபயோகம் செய்யலாம். தேமல், படர்தாமரை பிரச்சனை கொண்டவர்கள் இருந்தால் கட்டாயம் தனித்தனி சோப் நல்லது. அதேபோல், சிலர் பிறர் உபயோகம் செய்யும் சோப்பை உபயோகிக்க கூச்சம் கொள்வார்கள். அவர்களும் தனியே சோப் வைத்துக்கொள்ளலாம்.
ஆனால், சோப்களை தவிர்த்து குடும்பத்தினர் ஒட்டுமொத்தமாக உபயோகம் செய்யும் தலையணை, துண்டு, படுக்கை மற்றும் படுக்கை விரிப்பு காரணமாக கட்டாயம் பாக்டீரியா பரவும் வாய்ப்புகள் அதிகம். ஆகையால் சோப் விஷயமாக இருந்தாலும் சரி, தலையணை விஷயமாக இருந்தாலும் சரி தனித்தனியே சரியானது.