தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
மதுப்பழக்கம் உள்ளவர்களா நீங்கள்.? கண்டிப்பாக இதனை செய்யுங்கள்! இல்லாவிட்டால் டெத் கன்பார்ம்!
தற்போது மது அருந்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்சமயம் சிறியவர்களும் மது அருந்தி வருகின்றனர். மது பழக்கத்தினால் ஒரு சதவீதம் கூட யாருக்கும் பலன் கிடையாது. ஆனால் மக்களின் உயிரைக் காக்க வேண்டிய அரசாங்கமே மதுக் கடையை நடத்தி வருவது வருத்தமாக உள்ளது என தன்னார்வலர்கள் கூறி வருகின்றனர்.
மதுப் பழக்கத்தினால் பல பெண்கள் கணவனை இழந்து விதவையாக வாழும் சூழ்நிலை தமிழகத்தில் இருந்து வருகிறது. மேலும் பல குழந்தைகள் தங்களது சிறு வயதிலேயே தந்தையை இழந்து தவித்து வருகின்றனர். பல நபர்கள் தங்களது சுய சந்தோசத்திற்காக மது பழக்கத்தை கற்று கொண்டு அவர்களது எதிர்காலத்தை இழக்கின்றனர். மேலும் அவர்கள் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி அவர்களது குடும்பத்தையே நடுரோட்டில் நிற்க்க வைக்கின்றனர்.
மதுப்பழக்கம் ஆரம்பத்தில், மகிழ்ச்சியை அளிப்பது போலத்தான் இருக்கும். ஆனால் நாளடைவில் அவர்களது உடலில் உள்ள உறுப்புக்கள் கொஞ்சம் கொஞ்சமாக பாதிப்படைந்து உயிரைப் பறிக்கும் சூழ்நிலைக்கு கொண்டு செல்லும். எனவே இந்த மதுப்பழக்கத்தை விரைவிலேயே நீங்கள் விட்டுவிட்டால் உங்களின் அடுத்த தலைமுறை தழைத்து நிற்கும். நீங்கள் குடிக்கும் மதுவை பார்த்தால் உங்களுக்கு உங்களின் மனைவியின் உயிரும், பிள்ளைகளின் உயிரும்தான் ஞாபகம் வரவேண்டும். ஒரு குடும்பத் தலைவன் இல்லாவிட்டால், மொத்தமும் தலைகீழாக மாறிவிடும். உங்களை நம்பி வந்த மனைவிக்கும், உங்களுக்காக பிறந்த குழந்தைக்கும் உறுதுணையாக இருக்க கண்டிப்பாக நீங்கள் உயிருடன் இருக்க வேண்டும்.
தற்போதைய வாழக்கை முறையில் எந்த கெட்டபழக்கமும் இல்லாதவர்கள் பலருக்கு பல உடல் பிரச்சனை ஏற்படுகிறது. எனவே தயவு செய்து மது பழக்கத்தில் இருந்து மீள முடியாதவர்களாக இருந்தாலும் மருத்துவரை அணுகி, கொஞ்சம் கொஞ்சமாக மது பழக்கத்தில் இருந்து மீளுங்கள். மதுப் பழக்கத்திற்கு அடிமையானால் சாவு உறுதி என்பதை தெரிந்து கொண்டே மீண்டும் அதை செய்ய வேண்டாம். உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் உங்கள் கையில் தான் உள்ளது.