மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"ஆரஞ்சுப் பழத்தோடு இதெல்லாம் சாப்பிடக் கூடாதாம்!" எதெல்லாம் என்று தெரியுமா?
ஆரஞ்சுப் பழம் மிகவும் சத்தான மற்றும் ருசியான பழமாகும். இது குளிர்காலத்தில் அதிகம் கிடைக்க கூடிய பழங்களில் ஒன்றாகும். அனைவருக்கும் பிடிக்கும் இந்த ஆரஞ்சுப் பழங்களை சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது. அவை என்னென்ன என்று தெரிந்து கொள்வோம்.
ஆரஞ்சில் வைட்டமின் சி மற்றும் சிட்ரிக் அமிலம் அதிகளவில் உள்ளது. எனவே இது நோயெதிர்ப்பு சக்தி மற்றும் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது. பாலுடன் சேர்த்து சிட்ரஸ் பழங்களை சாப்பிடுவது நெஞ்செரிச்சல், அஜீரணத்தை ஏற்படுத்தும். தக்காளியுடன் ஆரஞ்சை சேர்த்து உண்ணுவது செரிமானப் பிரச்சனையை ஏற்படுத்தும்.
மேலும் வாழைப்பழம் மற்றும் தயிர் இவற்றுடன் ஆரஞ்சு பழத்தை சாப்பிடுவது வயிற்றுப் பிரச்சனைகளை ஏற்படுத்தும். மேலும் சில பருப்பு வகைகளுடன் ஆரஞ்சுப் பழங்களை சேர்த்து உண்டால், வயிற்றில் அமிலத்தன்மை அதிகமாகி செரிமானப் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
ஆரஞ்சுப் பழம் அமிலத்தன்மை நிறைந்தது. இதனுடன் கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்பது வயிற்றில் புண் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும். மேலும் பாலாடைக்கட்டியுடன் ஆரஞ்சை சாப்பிட்டால் அஜீரணத்தை தூண்டி, செரிமானத்தை மெதுவாக்கும்.