#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
குழந்தைகளுக்கு ஏற்படும் அலர்ஜியும், தடுக்கும் வழிமுறையும்.!!
நமது குழந்தைகளுக்கு பலவகை நோய்த்தொற்றுகள் கிருமிகளால் ஏற்பட வாய்ப்புள்ளது. உடலில் உள்ள தடிப்பு, தோல் மீது ஏற்படும் சிவப்பு திட்டு போன்றவையும் கிருமித்தொற்றால் ஏற்படும் நோய்கள் ஆகும். சுற்றுசூழல் காரணமாகவும் நோய்கள் ஏற்பட்டாலும், அவற்றில் பெரும்பாலானவை பாதிப்பில்லாதது.
குழந்தைகளின் உடலில் திரவம் நிறைந்த கொப்பளம், சிவப்பு - ஊதா புள்ளிகள் போன்றவை இருந்தால் மருத்துவரை அணுகலாம். இவையுடன் காய்ச்சல், அதிக அழுகை, உணவை சாப்பிட மறுப்பது, இருமல் போன்றவையும் இருக்கலாம்.
இதுபோன்ற பிரச்சனைகளை தவிர்க்க பச்சிளம் குழந்தைகளுக்கு சோப்பு மற்றும் பிற பொருட்களின் பயன்பாட்டினை தவிர்க்கலாம். இல்லாத பட்சத்தில் குழந்தைகளுக்கு சரும தொந்தரவை ஏற்படுத்தலாம். குழந்தைகளுக்கான ஆடையை தேர்வு செய்கையில், இறுக்கமான ஆடையை தவிர்ப்பது நல்லது. இவை குழந்தைகளின் தோலினை எரிச்சலூட்டும் செயலை தவிர்க்க உதவுகிறது.
குழந்தைகளின் துணியை அடிக்கடி மாற்றுவது, அரிப்புகள் ஏற்பட்டால் சொரிந்து கீறல் காயம் ஏற்படாமல் தடுக்க நகங்களை வெட்டுவது போன்றவை பிற பிரச்சனைகளை குறைக்க உதவும்.
அலர்ஜியில் பெரும்பாலான வடுக்கள் பாதிப்பு இல்லாதது. இவை குறுகிய காலத்தில் சரியாகிவிடும். சில அலர்ஜிகள் சிகிச்சையின் மூலமாக சரியாகும். பாக்டீரியா மற்றும் பூஞ்சை தாக்கம் இருந்தால், ஆன்டிசெப்டிக் கிரீம் தேவைப்படுகிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள் குறித்த புரிதல் இல்லாத பட்சத்தில் மருத்துவரை நாடுவது சாலச்சிறந்தது.