வாயுத்தொல்லையால் உடலில் பிரச்சனைகளா.? இந்த ஒரு விஷயம் பண்ணுங்க போதும்.!



benefits-of-drinking-butter-milk

மோர் என்பது நமது உணவு வகைகளில் முக்கியமானதாக இருக்கிறது. இது உடலைக் குளிர்ச்சியாக்கும் தன்மை கொண்டது. காரமான உணவுகளை உண்டபிறகு, சிறிது மோர் குடித்தால் வயிற்றில் ஏற்படும் எரிச்சல் அடங்கும். மேலும் நெஞ்செரிச்சல் பிரச்சனைக்கு மோர் ஒரு சிறந்த தீர்வாகும்.

Lifestyle

தினமும் நாம் உண்ணும் உணவில் மோர் சேர்த்துக்கொண்டால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, செரிமானமும் எளிதில் நடக்க உதவுகிறது. மோர் ஜீரணத்தை எளிதாக்கும் ஒரு உணவுப்பொருளாகும். சாப்பிட்டவுடன் இறுதியாக மோர் குடிப்பதைப் பழக்கமாக்கிக் கொள்ளவேண்டும்.

மோரில் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே தினமும் மோர் சாப்பிடுவதால் உடலில் நோயெதிர்ப்பு சக்தி உள்ளது. மேலும் மோர் உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கிறது. மேலும் உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க மோர் உதவுகிறது.

Lifestyle

மேலும் தினமும் மோர் குடிப்பதால் இரவில் தூக்கமும் நன்றாக வரும். தினமும் சாப்பிட்ட பிறகு மோர் குடிப்பதால், நாம் உண்ட எண்ணெய்ப்பதார்த்த உணவில் சேர்த்துள்ள நெய், எண்ணெய் போன்றவற்றை உணவுக்குழாய்களில் இருந்து கழுவி வெளியேற்ற உதவுகிறது.