மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இஞ்சி டீ குடித்தால் உடலில் இவ்வளவு மாற்றங்கள் நிகழுமா..
தினமும் காலையில் எழுந்தவுடன் டீ மற்றும் காபி குடிப்பது அன்றைய நாளை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும். ஆனால் ஒரு சிலருக்கு வெறும் வயிற்றில் டீ மற்றும் காபி குடிப்பது வயிற்றில் புண், நெஞ்செரிச்சல் போன்ற நோய்களை உருவாக்கும்.
ஆனால் குளிர்காலத்தில் ஏற்படும் சளி மற்றும் இருமல் போன்ற தொல்லைகள் இருந்து விடுபட தினமும் காலையில் இஞ்சி டீ குடித்து வரலாம். பால் சேர்க்காமல் இஞ்சி டீ குடித்து வருவதனால் பல நோய்களிலிருந்து நம்மை காக்கும்.
தினமும் இஞ்சி டீ குடிப்பதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகதோடு அன்றைய நாளில் புத்துணர்ச்சியோடு இருப்பதற்கு உதவுகிறது. செரிமான கோளாறுக்கு சிறந்த மருந்தாக இஞ்சி இருந்து வருவதால் இதனை டீயாக குடிப்பதால் உடலுக்கு நன்மையை ஏற்படுத்தும்.
உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பை கரைப்பதோடு ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது இஞ்சி டீ. உடலில் புற்று நோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது. வாயுத்தொல்லை, பித்தப்பை கல் போன்றவற்றிற்கும் மருந்தாக இருக்கிறது.