மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாழை இலையில் சாப்பிடுவது இவ்வளவு நல்லதா? வாங்க தெரிஞ்சுக்கலாம்.!
வாழை இலையில் சாப்பிடும் பழக்கம் தமிழர்களின் வாழ்க்கையில் மிக முக்கிய நிகழ்வாக இருந்து வந்தது. ஆனால் தற்போதைய நாகரிக வாழ்க்கையில் வாழை இலையை மறந்து விட்டனர். ஏதோ ஒரு சில இடங்களில் மட்டுமே வாழை இலைகள் பயன்படுத்தப்படுகிறது.
ஆனால் இன்னும் ஒரு சில கிராமங்களில் பழமை மாறாமல் வாழை இலையை பயன்படுத்துகின்றனர். அப்படிப்பட்ட வாழை இலைக்கு ஏராளமான நன்மைகள் உண்டு என்பது நம் முன்னோர்களின் வழக்கமாக உள்ளது.
அந்த வகையில் வாழை இலையில் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் நாம் காணலாம். வாழை இலையின் மேல் உள்ள பச்சை தன்மை நாம் சாப்பிடும் உணவை எளிதில் ஜீரணம் ஆகும் தன்மை உடையது எனவும் வயிற்றுப்புண் போன்றவற்றை குணப்படுத்தும் எனவும் கூறப்படுகிறது.
அதேபோல் வாழை இலையில் சாப்பிட்டால் நன்றாக பசியை தூண்டும் எனவும் நோய் நொடி இல்லாமல் நீண்ட நாட்கள் வாழலாம் என்றும் கூறப்படுகிறது.
வாழை இலையில் சாப்பிடுவது என்பது தமிழர்களின் முக்கிய பாரம்பரிய கலாச்சாரமாக உள்ளது. மேலும் வாழை இலையில் சாப்பிட்டால் தோல் நோய்கள் எதுவும் வராமல் தடுக்கப்படும் என்றும் ரத்தம் சுத்திகரிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
குறிப்பாக வாழை இலையில் சாப்பிட்டால் சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கும் எனவும் சிறுநீர் தொடர்பான நோய்கள் எதுவும் வராது எனவும் கூறப்படுகிறது. அதேபோல் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.