என்னது! ஓட்ஸ் சாப்பிட்டால் இந்த நோயெல்லாம் வருமா?! தெரிந்து கொள்வோம் வாங்க!



Benefits of eating oats

சமீப காலமாக உடல் எடையைக் குறைக்க விரும்பும் பலரும், தினசரி தங்களின் காலை உணவாக எடுத்துக்கொள்வது ஓட்ஸ் தான். ஓட்ஸில் நார்ச்சத்துக்களும், பல அத்தியாவசியமான சத்துக்களும் நிறைந்து உள்ளன. இது ஒரு ஆரோக்கியமான உணவு தான்.

Lifestyle

ஆனால், தொடர்ந்து தினமும் ஓட்ஸ் சாப்பிடுவதால் சில பக்கவிளைவுகளும் ஏற்படும். அவை என்னென்ன என்று பார்ப்போம். தினமும் ஓட்ஸ் சாப்பிடுவதால் வயிற்று உப்புசத்திற்கு வழிவகுக்கும். அளவுக்கு அதிகமாக தினமும் ஓட்ஸ் உட்கொள்வதால் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படும்.

இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்யும். எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஓட்ஸ் சாப்பிடுவது ஆபத்தானது. பொதுவாகவே அனைவரும் அனைத்து விதமான சத்துக்களும் அடங்கிய உணவுகளைத் தான் தினமும் உட்கொள்ள வேண்டும்.

Lifestyle

நம்மில் நிறைய பேர் ஓட்ஸ் உடல் எடையைக் குறைக்கும் என்று நினைக்கிறோம். ஆனால் உண்மையில் ஓட்ஸ்  உடல் எடையை அதிகரிக்கத் தான் செய்கிறது. ஆரோக்கியமான பலனைப் பெற ஓட்ஸுடன் நட்ஸ், விதைகள், பழங்களை சேர்த்து சாப்பிடலாம். வேறு கண்ட கண்ட டாப்பிங்சை சேர்ப்பதை தவிர்க்கலாம்.