திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
உலர் திராட்சையை ஊறவைத்து தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா.!?
உலர் திராட்சை
பொதுவாக பழங்கள் என்றால் ஊட்டச்சத்து மிகுந்தவை என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இதைவிட உலர் பழங்கள் எடுத்துக் கொள்வது ஊட்டச்சத்தை அதிகரிப்பதோடு, உடலில் பல நன்மைகளையும் தருகிறது. குறிப்பாக உலர் திராட்சையை தண்ணீரில் இரவு ஊற வைத்துவிட்டு காலையில் எழுந்து தண்ணீரோடு சேர்த்து சாப்பிடும் போது உடலுக்கு பலவிதமான நன்மைகள் ஏற்படுகிறது. இதைக் குறித்து இப்படி விளக்கமாக பார்க்கலாம்?
உலர் திராட்சை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
1. உலர் திராட்சையில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் இதை தண்ணீரில் ஊற வைத்து குடிக்கும் போது செரிமான பிரச்சனை சரியாகி செரிமான மண்டலத்தை சீர்படுத்துகிறது.
2. மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் உலர் திராட்சையை தண்ணீரில் ஊற வைத்து குடிப்பதன் மூலம் சிறந்த தீர்வு கிடைக்கும்.
3. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் உலர் திராட்சை பழத்தை தண்ணீரில் ஊற வைத்து தண்ணீரோடு சேர்த்து குடித்து வந்தால் உடல் எடை குறையும்.
4. உலர் திராட்சையில் ஊற வைத்த தண்ணீர் சிறந்த ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்களாக உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது.
5. கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி கல்லீரலை சுத்தப்படுத்துகிறது.
6. மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற பிரச்சனை உள்ளவர்கள் உலர் திராட்சையை ஊற வைத்த தண்ணீரை குடித்து வரலாம். இது சிறந்த தீர்வாக அமையும்.
7. இரும்புச்சத்து மற்றும் ஆக்சிஜனேற்றத்தின் ஆதாரமாக இருக்கும் திராட்சை நீரை குடித்து வந்தால் வயிற்றில் உள்ள பிரச்சனைகள் நீங்கும்.
8. புற்று நோயை உண்டாக்கும் செல்களுக்கு எதிராக செயல்படும் பண்புகளைக் கொண்டால் இதை தினமும் காலையில் குடித்து வருவது நல்லது.
9. உடலில் ஏற்படும் இரும்பு சத்து குறைபாட்டை தடுப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.
10. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டத்தை சீர்படுத்துகிறது.
இவ்வாறு பல்வேறு நன்மைகளையுடைய உலர் திராட்சையை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட்டு வருவது உடலுக்கு நல்லது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: இதை தெரிஞ்சுக்கோங்க.! தயிரில் வெள்ளரிக்காய் விதை சேர்த்து சாப்பிட்டு வந்தால்.!?
இதையும் படிங்க: "ஆயுளை அதிகப்படுத்தும் பழைய சோறு" பழைய சோறு சாப்பிடுவதால் சளி தொல்லை ஏற்படுகிறதா.!?