பப்பாளியில் உள்ள நன்மைகள் பற்றி தெரியுமா?..! இனிமே மிஸ் பண்ணாம சாப்பிடுங்க..!!
பப்பாளியின் மகத்துவம் குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.
பப்பாளிபழம் பலருக்கும் பிடித்த பழமாக இருக்கிறது. பப்பாளியில் ஏராளமான நன்மைகள் நிறைந்து கிடக்கின்றன. நார்ச்சத்து மற்றும் வைட்டமின் போன்றவையும் இருக்கின்றன. இது செரிமான கோளாறு, உடல் பருமன், சர்க்கரை நோய், புற்றுநோய் போன்ற பிரச்சனைகளுக்கும் தீர்வாக இருக்கிறது.
நரம்பு தளர்ச்சி தொடர்பான பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வை இது கொடுக்கிறது. பப்பாளி பழத்தை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் இவற்றில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் பல பிரச்சனைகளை தீர்க்க உதவும். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் பப்பாளிசாறை பருகி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
அமிலங்கள், பொட்டாசியம் போன்றவை வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து உடல் எடையை குறைக்க உதவி செய்யும். முகத்தில் ஏற்பட்டுள்ள சுருக்கம் மறைந்து முகம் புத்துணர்ச்சியோடு காணப்படும். கண்கள் மற்றும் சருமத்திற்கு நன்மையை ஏற்படுத்தும்.