திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
குறைவான வருமானத்திலும், சேமிக்க முடியும்.! சூப்பர் ஐடியா இதோ.!
சேமிப்பின் முக்கியத்துவம் அனைவரும் அறிந்ததே. நீங்கள் பணத்தை சேமிப்பதால் எதிர்காலத்திற்கான நிதி நிலைமை பாதுகாப்பாக இருக்கும். உங்கள் அவசர காலங்களையும், எதிர் பாராத செலவுகளையும் எளிதில் சமாளிக்க முடியும். ஸ்ட்ரெஸ் இல்லாத நிம்மதியான வாழ்கை வாழ சேமிப்பு உதவும். கடன் தொல்லைகளை தவிர்க்கலாம். சேமிப்பு உங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதோடு, நீங்கள் முடிவுகள் எடுப்பதற்கான வாய்ப்புகளை விரிவு படுத்துகிறது.
உங்களின் சம்பளம் வந்தவுடன் அந்த மாதத்திற்கான செலவு திட்டமிடலைத் துவங்குங்கள். பட்ஜெட் போட்டு செலவு செய்வதன் மூலம் தேவையற்ற செலவுகளை தவிர்க்கலாம். மாத செலவுகளை குறித்து வைப்பதனால் மாத இறுதியில் தேவையான மற்றும் தேவையற்ற செலவுகளை ஆராய்ந்து பின்வரும் மாதங்களில் அதனை சரி செய்ய முடியும். 50 சதவீத வருமானத்தை உங்களின் தேவைக்கும் (Needs), 30 சதவீதம் வருமானத்தை உங்களின் ஆசைக்கும் (Wants), மேலும் 20 சதவீத வருமானத்தை உங்கள் சேமிப்புக்கும் ஒதுக்குங்கள்.
பெரும்பாலும் உணவகங்களில் உண்பதை தவிர்த்து எளிமையான உணவுகளை வீட்டில் சமைத்து உண்ணலாம். மளிகை பொருட்கள் வாங்குவதற்கு சூப்பர் மார்க்கெட், மால் போன்ற இடங்களை தேர்வு செய்யாமல், மொத்த வியாபாரம் (Wholesale) செய்யும் கடைகளில் பொருட்கள் வாங்கலாம். பொருட்கள் வாங்க செல்லும் முன் அதற்கான பட்டியலை எடுத்துச் செல்வது பண விரயத்தை தவிர்க்கும்.
வீட்டில் உள்ளவர்களுக்கு துணியோ, நகையோ அல்லது பொருட்களோ வாங்க வேண்டுமானால் அவற்றை தள்ளுபடி காலங்களில் வாங்கலாம். எந்த ஒரு பொருள் வாங்குவதற்கு முன்பும், சில நாட்கள் தள்ளிப் போடுங்கள். அதற்குள் அதன் தேவை நமக்கு புரிந்துவிடும். அது தேவையற்ற பொருள் என்றால் அதனை வாங்குவதை தவிர்க்க இது உதவியாக இருக்கும்.
இன்று சிறிதாய் சேமிக்கும் தொகை கூட நாளடைவில் நமக்கு பெரிதாக உதவலாம். இதனை மனதில் கொண்டு சேமிக்க துவங்குங்கள்.