காந்தாரா 2 திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிக்கன் நூடுல்ஸ் சூப்... வீட்டிலேயே ஈசியாக செய்யலாம் வாங்க..!!
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிக்கன் நூடுல்ஸ்சூப் எப்படி செய்வது என்பது பற்றி தற்போது காண்போம்.
தேவையான பொருட்கள் :
எண்ணெய் - 2 தேக்கரண்டி
மிளகுப்பொடி - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கு ஏற்ப
நூடுல்ஸ் - 1/2 பாக்கெட்
சிக்கன் - 1/2 கிலோ
பூண்டு - 5 பல்
வெங்காயம் - 1
கொத்தமல்லி - கையளவு
ஸ்ப்ரிங் ஆனியன் - 3
செய்முறை :
★முதலில் சிக்கனை நன்கு சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
★பின் நூடுல்ஸை தனியாக வேக வைத்துக் கொள்ளவும்.
★அடுத்து கொத்தமல்லி, வெங்காயம், கேரட், ஸ்ப்ரிங் ஆனியனை பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.
★குக்கரில் மூன்று டம்ளர் தண்ணீர் சேர்த்து, சிக்கன் துண்டுகளோடு காய்கறிகள், உப்பையும் சேர்த்து குக்கரை மூடி 6 விசில் வரும் வரை காத்திருக்க வேண்டும்.
★விசில் வந்த பின் அடுப்பை அணைத்து குக்கர் மூடியை திறந்து நூடுல்ஸ், மிளகுத்தூள் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
★இறுதியாக ஸ்ப்ரிங் ஆனியன், கொத்தமல்லியை தூவி பரிமாறினால் சிக்கன் நூடுல்ஸ் தயாராகிவிடும்.