மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உணவில் சாரப்பருப்பு எடுத்துக் கொள்வது ஏன் அவ்வளவு அவசியம்.! தெரிந்து கொள்ளுங்கள்.!
சாரப்பருப்பில் தாதுக்கள், வைட்டமின்கள், மற்றும் புரதங்கள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் நம் ஆரோக்கியமான வாழ்விற்கு முக்கியப் பங்கு வகிக்கிறது. செரிமானப் பிரச்சனையிலிருந்து, இதய நோய் வரை பயனளிக்கும் ஒரு பருப்பு என்னவென்றால் அது சாரப்பருப்புதான்.
நார்ச்சத்து நிறைந்த இந்த சாரப்பருப்பை எடுத்துக் கொள்ளும்போது குடல் பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் இந்த நார்ச்சத்து குடல் இயக்கத்தை சீராக்கி, மலச்சிக்கலை போக்கும் மற்றும் குடல் செயல்பாட்டை ஊக்குவிக்கும். சாரப்பருப்புகளில் ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் கொழுப்பு அமிலம் நிறைந்துள்ளது.
நீரிழிவு நோயாளிகளுக்கு தீர்வாக அமைகிறது. சாரப்பருப்பில் உள்ள நார்ச்சத்து இரத்த சர்க்கரை அளவை சீராக பராமரிக்க உதவுகிறது. சாரப்பருப்பு மருத்துவக் குணங்களுக்காக ஆயுர்வேதம் மற்றும் யுனானி மருத்துவத்திலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பயன்படுத்தபடுகிறது. இதன் சுவை பாதாம் பருப்பு போலவே இருக்கும். சாரப்பருப்பை பெரும்பாலும் இனிப்பு உணவுகளில் பயன்படுத்தபடுகிறது.
சாரப்பருப்பை ஊற வைத்து அரைத்து தலையில் தடவி பின் 20நிமிடகள் கழித்து குளித்து வந்தால் முடி உதிர்வது நின்று அடர்த்தியாக வளரும். இதே போல் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. கால்சியம் உள்ளதால் இதன் தொடர் நுகர்வு எலும்பு அடர்த்திக்கு உதவுகிறது. மேலும் உடலில் உள்ள ஒட்டுமொத்த பாதுகாப்பு அமைப்பையும் ஆதரிக்கிறது. எனவே உணவில் சாரப்பருப்பை அடிக்கடி சேர்த்துக் கொள்ளவும்.