திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
3 பேரை காதலித்த கல்லூரி மாணவி.. காதலர்களுக்குள் தகராறு.. மாணவிக்கு நேர்ந்த சோகம் !!
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ரெட்டிகுண்டா பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவருடைய மகள் 'சங்கீதா' , சித்தூரில் உள்ள அரசு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் ஒரே நேரத்தில் 3 பேரை காதலித்ததால் ஏற்பட்ட தகராறில் தற்கொலை செய்துகொண்டார்.
கடந்த 27-ந் தேதி வீட்டில் நடந்த குடும்ப தகராறு காரணமாக வீட்டில் இருந்து வெளியே சென்ற சங்கீதா, இரவு வரை வீடு திரும்பவில்லை. உறவினர்கள் சங்கீதாவை பல்வேறு இடங்களில் தேடியும் காணவில்லை. இதுகுறித்து சித்தூர் 4-வது காவல் நிலையத்தில் சங்கீதாவின் பெற்றோர் புகார் கொடுத்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில், காவல்துறையினரும் சங்கீதாவை தேடிவந்தனர். இந்த நிலையில் நேற்று ரெட்டிகுண்டா பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் ஒரு பிணம் கிடப்பதாக காவல் துறையினருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர்.
காவல் துறையினர் சென்று பார்த்தபோது பிணமாக கிடந்தவர் வீட்டைவிட்டு வெளியேறிய சங்கீதா என்பது தெரிந்தது. மாணவி சங்கீதா, தான் படிக்கும் கல்லூரியை சேர்ந்த மாணவனையும், ராணுவத்தில் பணிபுரிபவரையும் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் ஆகிய 3 பேரை காதலித்து வந்ததாக கூறுகின்றனர்.
சங்கீதாவை காதலிப்பது குறித்து இந்த 3 பேரும் ஒருவருக்கொருவர் தகராறு செய்துகொண்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் ஒரு நாள் சங்கீதா வீட்டுமுன்பு இவர்கள் 3 பேரும் தகராறு செய்தனர். இதுகுறித்து சங்கீதாவின் பெற்றோருக்கு தெரியவே அவர்கள் சங்கீதாவை கண்டித்துள்ளனர். இதனால் கோபமடைந்த அடைந்த சங்கீதா கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.