எப்போதும் உங்க வீட்டு கரண்ட் பில் அதிகமாக வருகிறதா?.. இனி இப்படி செய்து பாருங்கள்..! அசத்தல் டிப்ஸ்..!!



Decrease current bill

 

தனி மனிதனின் அடிப்படைத் தேவைகளில் என்று மின்சாரமும் இடம்பெற்று விட்டது. சிறிது நேரம் கூட மின்சாரம் இல்லாமல் நம்மால் இருக்க முடியாது என்ற நிலை உருவாகி உள்ளது. நாம் பயன்படுத்தும் பொருளும் மின் பயன்பாட்டை வைத்தே இயங்குகிறது. 

மாதம் ஒரு முறையோ அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையோ மினக்கட்டணம் செலுத்த வேண்டியதால், நாம் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துகிறோமா அல்லது அதிகமாக விரயம் செய்கிறோமா என்ற நிலையையும் நாம் கவனத்தில் எடுக்க வேண்டும். 

மின்சாரத்தின் உதவியில்லாமல் எந்த வேலையையும் நாம் செய்ய இயலாது என்று கூறும் அளவுக்கு மின்தேவை ஏற்பட்டுள்ளது. அன்று சட்னி, மாவு அரைக்க ஆட்டுக்கல், அம்மி என்று பலவகையான பொருட்கள் நம்மிடையே இருந்தது. தற்போது மிக்ஸி, கிரைண்டர் அதன் இடத்தை மாற்றிவிட்டது.

Latest news

நமது வீட்டில் மின்பயன்பாட்டை குறைக்கும் பல்புகளை பயன்படுத்துவதன் மூலமாக மின்சாரத்தை சேமிக்கலாம். இதன் ஆயுட்காலம் பிற பல்புகளை விட கூடுதலாகவே இருக்கும். எந்த நேரமும் என்விசிறியை இயக்காமல் தேவையான நேரங்களில் மின்விசிறி இயக்குவது நல்லது. காலை மற்றும் மாலை நேரங்களில் இயற்கையின் காற்றை சுவாசிக்கலாம். 

அதேபோல மின்விசிறிகளுக்கு எலக்ட்ரானிக் ரெகுலேட்டர் பயன்படுத்தும் பட்சத்தில் 15 விழுக்காடு மின்சாரம் சேமிக்கப்படும். வெயில் காலங்களில் வாஷிங் மிஷினில் துணியை உலர்த்தாமல், சூரிய ஒளியில் உணர்த்துவது நல்லது. சிலரின் வீட்டில் டிவி பார்க்கப்படவில்லை என்றாலும் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும், இதனை தவிர்க்கலாம். 

ஒரே அறையில் குழந்தைகள் படிப்பது, ஒன்றாக அமர்ந்து அனைவரும் ஒரே அறையில் சாப்பிடுவது பிற அறைகளுக்கான மின்சார தேவையை நிறுத்தும். பகல் நேரத்தில் ஜன்னலை திறந்து வைத்து வீட்டு வெளிச்சத்தை உறுதி செய்து பின் பல்புகளை உபயோகப்படுத்தலாம் அல்லது தவிர்க்கலாம். 

Latest news

தேவையில்லாத நேரத்தில் கம்ப்யூட்டர், ஏசி போன்றவற்றின் பயன்பாடை நிறுத்தி வைக்கலாம். சிலர் ஏசியில் ஸ்விட்சை அணைக்காமல் ரிமோட்டில் மட்டுமே அணைத்து வைப்பார்கள். இவ்வாறு செய்வது ஏசி காத்திருப்பு முறையில் இருப்பதால், அதற்கு தொடர்ந்து மின்சாரம் சென்று கொண்டே இருக்கும். 

ஒவ்வொரு சீசனுக்கும் ஏசியை சர்வீஸ் செய்து பயன்படுத்துவது நல்லது. மின்மோட்டார் பயன்பாட்டை குறைக்க நீரை சிக்கனமாக உபயோகம் செய்ய வேண்டும். எலக்ட்ரிக் அடுப்புகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.