வாயில் எச்சில் ஊறும் சுவையில் இஞ்சி ஊறுகாய்..! கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க..! உடனே இந்த ரெசிபியை நோட் பண்ணுங்க...



delicious-and-healthy-ginger-pickle

இஞ்சி நம் உடலுக்கு மிகவும் நல்லது. பசியின்மையைப் போக்கி நேரத்திற்க்கு பசியைத் தூண்டும். மேலும், செரிமானக் கோளாறுகளை சரி செய்யும். இஞ்சி பொதுவாக சிலருக்கு பிடிக்காது. அப்படி இருப்பவர்கள் கூட இந்த ஊறுகாயைக் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். இப்போது இந்த இஞ்சி ஊறுகாயை சுவையாக செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானப் பொருட்கள் :

நல்லெண்ணெய் - 100 ml

இஞ்சி - 1 கப் ( துருவியது )

வர மிளகாய் - 10 அல்லது 15

புளி - 1/2 கப்

வெல்லம் - 1/2 கப் 

உப்பு - தேவையான அளவு 

கடுகு - 2 தேக்கரண்டி 

வெந்தயம் - 1 தேக்கரண்டி

பெருங்காயம் தூள் - 1/2 தேக்கரண்டி 

கருவேப்பிலை - 1 கொத்து

ginger

செய்முறை :

முதலில் அடுப்பைப் பற்ற வைத்து ஒரு கடாயை வைக்கவும். அதில் வெந்தயம் மற்றும் கடுகு சேர்த்து வறுத்துக் கொள்ளவும். அதை ஒரு மிக்சி கப்பில் சேர்த்து பொடியாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்பு, அதே கடாயில் 50 மில்லி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் தோல் நீக்கி துருவியை இஞ்சி சேர்த்து நன்றாக வதக்கவும். பின்பு புளி மற்றும் வர மிளகாய் சேர்த்து வதக்கவும். அதை ஆற விட்டு சுத்தமான அம்மியில் பக்குவமாக பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவும். இடையில் தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.

இப்போது மற்றொரு வாணலியில் 50 மில்லி  நல்லெண்ணெய் சேர்த்து கடுகு மற்றும் கருவேப்பிலை சேர்த்து பொறிந்ததும் அதில் இஞ்சி கலவையை அதில் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்பு, அதில் தேவையான அளவு உப்பு, பெருங்காயம் தூள் மற்றும் வெல்லம் சேர்த்து கிளற வேண்டும். இப்போது அதில் வெந்தயம் மற்றும் கடுகு பொடியை சேர்த்து நன்றாக வதங்கி கெட்டி பதம் வந்ததும் இறக்கி விட வேண்டும். இப்போது சுவையான இஞ்சி ஊறுகாய் ரெடி. இதை நன்றாக ஆற வைத்து சுத்தமான கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளலாம். 3 மாதம் வரை கேட்டு போகாது. இதை இட்லி, தோசை, சூடான சாதம் ஆகியவற்றில் போட்டு சாப்பிடலாம். சுவை நன்றாக இருக்கும். மேலும், உடலுக்கு ஆரோக்கியமானது.