உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரும் வெள்ளரிக்காயில் சுவையான குழம்பா?!: வாங்க சமைக்கலாம்..!



Delicious Gulamba in Cucumber that has various benefits for the body

உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரும் வெள்ளரிக்காயில் சுவையான குழம்பு தயாரிக்கும் முறை குறித்து காண்போம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்:  

தக்காளி – 2
பூண்டு - 4
துவரம் பருப்பு - 100 கிராம்
வெங்காயம் - 1
வரமிளகாய் - 2
பச்சை மிளகாய் - 2
கடுகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
வெண்ணெய் - 1 மேசைக் கரண்டி
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி – சிறிதளவு
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை மற்றும்
புளிச்சாறு - சிறிது

செய்முறை :  வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் உறித்த  பூண்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெள்ளரிக்காய் தோலை நீக்கி, சிறு சிறு துண்டுகளாக்கி கொள்ள வேண்டும்.

இதன் பின்னர் துவரம் பருப்பை கழுவி குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி, 4 விசில் விட்டு வேக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், பெருங்காயத் தூள், வரமிளகாய் சேர்த்து தாளித்த பின்னர் அதில் பூண்டு, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

பின்னர் வெங்காயம் வதங்கியதும் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி அடுத்து அதில் வெள்ளரிக்காய் துண்டுகளை சேர்த்து வதக்கவும். பின்னர் இதில் தேவையான அளவு தண்ணீர் சிறிது ஊற்றி, மூடி வைத்து மிதமான தீயில் வேக வைக்கவும்.

வெள்ளரிக்காய் ஓராளவு வெந்ததும் அத்துடன் வேக வைத்துள்ள பருப்பை சேர்த்து, அதோடு வெண்ணெயையும் சேர்த்து கிளறி, சிறிது புளிச்சாற்றினை சேர்த்து கொதிக்க விட்டு, கொத்த மல்லியைத் தூவி இறக்கினால் சுவையான வெள்ளரிக்காய் பருப்பு குழம்பு தயார்.