மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உஷார்.. பிரிட்ஜில் காய்கறி-பழங்களை ஒன்றாக வைக்கும் பழக்கமுள்ளவரா நீங்கள்?.. உங்களுக்குத்தான் இந்த செய்தி.!
ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு தனித்தன்மையானது இருக்கிறது. குளிர்நிலை-வெப்பநிலை மாற்றத்திற்கு ஏற்ப சில பொருட்களை நாம் பிரட்ஜில் வைக்கலாம்.
சில பொருட்களை இயற்கையாகவே வளர விடுவது நல்லது. பழங்கள் மற்றும் காய்கறிகளை நாம் பிரிட்ஜில் சேமித்தால், கவனமுடன் இருக்க வேண்டும். இவற்றை ஒன்றோடு ஒன்று வைக்கக்கூடாது.
பெரும்பாலான காய்கறிகள் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க பிரிட்ஜில் வைத்து பாதுகாப்பு வருகிறோம். ஆரஞ்சு, ஆப்பிள் போன்ற பழங்களை நாம் ஒன்றாக சேர்த்து வைக்கலாம். ஆனால் காய்கறிகளையும் பழங்களையும் சேர்த்து வைப்பது நல்லதல்ல.
காய்கறிகளில் இருந்து எத்திலின் வாயு வெளியேறி பிற பழங்களை பழுக்க வைக்கும். வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவற்றை ஒரே பாத்திரத்தில் சேர்த்து வைக்கக் கூடாது. இது இரண்டையும் தனித்தனியாக வைக்க வேண்டும். நல்ல காற்றோட்டம் தேவை. அப்போதுதான் அவை கெடாமல் இருக்கும்.
பேரிக்காய் போன்ற பழத்துடன் பூசணிக்காயை வைக்கக்கூடாது. இதனால் பூசணிக்காய் விரைவில் கெட்டு போகலாம். பிரிட்ஜில் வெள்ளரிக்காயை வைக்கும் போது அதனை எதனுடன் சேர்த்து வைக்க கூடாது. கிழங்கு வகைகளை எப்போதும் பிரிட்ஜில் வைக்க வேண்டாம். தேவைக்கேற்ப வாங்கி உபயோகம் செய்து கொள்ள வேண்டும்.